கஜகஸ்தானில் 110 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து.
கஜகஸ்தானில் 110 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தானில் 110 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டாவ் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்ததாகவும், உடனடியாக மீட்புப் பணியாளர்கள் சென்று உள்ளே இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதித்த போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்தவர்களின் உயிர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுவரை 12 பேர் காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர், பத்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர், மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
A plane carrying 110 passengers suddenly crashed in Kazakhstan, causing great shock.
A Russian plane carrying 110 people has crashed in Kazakhstan, according to reports.
It is reported that the plane suddenly caught fire while landing at Aktau airport, and rescue workers immediately went to rescue the passengers inside. It is reported that some were rescued with injuries and that rescue operations are underway.
The plane suddenly had a technical fault. The initial investigation indicates that the plane crashed when it was cleared for an emergency landing.
There is no information yet about the lives of the passengers on this plane. So far, 12 people have been rescued unharmed, ten have been rescued with injuries, and rescue operations are underway for the others.
0 Response to "கஜகஸ்தானில் 110 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து."
إرسال تعليق