TNPSC Group 4: இன்னும் 2 நாள்தான் குரூப் 4 தேர் வாளர்களுக்கு tnpsc புதிய அறிவிப்பு …

Theechudar - தீச்சுடர்
By -
0

TNPSC Group 4  தேர்வுச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கடைசி நாள் நவம்பர் 21. தேர்வில் தேர்ச்சி பெற்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அதற்குள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

TNPSC Group 4  தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக பதிவேற்றம் செய்ய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. அதாவது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவம்பர் 21-ம் தேதி கடைசி நாள் என்று TNPSC தெரிவித்துள்ளது.

TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20,37,102பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 20,36,774 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். TNPSC குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 4,45,345 பேர் தேர்வு எழுதவில்லை. 15,91,429 பேர் தேர்வு எழுதினர்.

இதையும் படியுங்கள் : Tamil Nadu Ration Shop Salesmen 2024 : Admit Card “Hall ticke” தமிழ்நாடு ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ..

தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியானது

இந்தத் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களில் மிக விரைவாக வெளியிடப்பட்டன. அதாவது அக்டோபர் 28ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.அதே நாளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 ஆக உயர்ந்துள்ளது.இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்களின் பெயரில் உள்ள பிழைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், தகுதியுடைய அலுவலர்கள் உள்ளிட்டோர் சான்றிதழ் பெறுவது, கணினி அடிப்படையிலான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட விவரங்களை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சான்றிதழ்.

இதையும் படியுங்கள் : மாமியாரை எரித்த மருமகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொலை
நவம்பர் 21 கடைசி தேதி

இந்நிலையில் குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவம்பர் 21ம் தேதி கடைசி நாளாகும். தேர்வில் தேர்ச்சி பெற்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அதற்குள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாக தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)