Fengal Cyclone: ​​வானிலையில் திடீர் மாற்றம்.. ஃபெங்கல்புயல் ​​வானிலையில் திடீர் மாற்றம்.. Fengal cyclone உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல் உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் நாளை மதியம் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலையில் திடீர் மாற்றம்

நேற்று மதியம் கிடைத்த வானிலை அறிக்கையின்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று கரையை நெருங்கும் போது வலுவிழந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், நேற்று மாலை நிலவரப்படி, புயல் உருவாகாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என, கணிக்கப்பட்டது. அதன்பின், இன்று காலை நிலவரப்படி, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் இது அடுத்த மூன்று நாட்களில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் தெரிவித்துள்ளார். மேலும் இது தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடல் ஆட்டம் தொடங்கியது.. புதிய புயல் உருவாகிறதா? 7 நாட்கள் என்ன  நடக்கும்? ரொம்ப முக்கியம் | Will there be a new cyclone near the Bay of  Bengal? What will happen to ...

புயலாக கரையை கடக்கும்

இந்த புயலுக்கு ஏற்கனவே ஃபெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்திலும், சில சமயம் 90 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய கோரி பிரதமருக்கு முதல்வார கடிதம்..

சென்னையில் மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Response to "Fengal Cyclone: ​​வானிலையில் திடீர் மாற்றம்.. ஃபெங்கல்புயல் ​​வானிலையில் திடீர் மாற்றம்.. Fengal cyclone உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல் உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்"

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel