அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தோற்கடித்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தோற்கடித்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கிறார். 2020ல் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், இந்த முறையும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறார். தோல்விக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் அமெரிக்க அதிபர் க்ரோவர் க்ளீவ்லேண்ட் தான் சாதனை படைத்தவர். 1885ல் முதல்முறையாக அதிபராக பதவியேற்றார்.1889 வரை பதவி வகித்தார். 4 வருட இடைவெளிக்குப் பிறகு 1893ல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1897 வரை அதிபராக பணியாற்றினார்.
கருத்துரையிடுக
0கருத்துகள்