நிர்வாகிகள் பிரியங்கா காந்திக்கு எம்பி பதவி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புவழங்கிய - காங்கிரஸ் நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பிரியங்கா காந்திக்கு எம்பி பதவி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட வாணாபுரம் கூட்ரோட்டில் அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகாஅர்ஜுன் கார்கே, தமிழ் நாடுகாங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகையார், ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசேலத்தார் ps ஜெய்கனேஷ் வழியில். ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் 28/11/2024 அன்று ரிஷிவந்தியம் வாணாபுரம் பகண்டை x ரோட்டில். இளைய இந்திரா பிரியங்கா காந்திக்கி MP பதவி ஏற்பு விழா.
மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியா கூட்டணியின் வெற்றி விழாவை முன்னிட்டு ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் S கிருபானந்தம் தலைமையில் மகிழ்ச்சியாரத்தோடு பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேற்படி ரிஷிவந்தியம் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அங்குள்ள பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதையும் படியுங்கள் : TNPSC Group 4 தற்போது புதிய அறிவிப்பு !!.. என்னதெரியுமா?
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர் அப்பாராசு, ரிஷிவந்தியம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் இராமகிருஷ்ணன், வட்டார அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் S. சிவலிங்கம் , கரையாம்பாளயம் கிராம காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் காங்கிரஸ் வட்டார பொது செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட பொது செயலாளர் வேல்முருகன், சின்னகொள்ளியூர் தனபால், ஓடியந்தல் முனுசாமி, மரூர் காசி, மரூர் சுந்தர், பெரியப் பகண்டை லோகனாதன் , மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு காங்கிரஸ் கொடி பிடித்தபடி கொண்டாடினர்.
தீச்சுடர் செய்தியாளர்
S.சிவலிங்கம்
ரிஷிவந்தியம்.
8925458693
0 Response to "நிர்வாகிகள் பிரியங்கா காந்திக்கு எம்பி பதவி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புவழங்கிய - காங்கிரஸ் நிர்வாகிகள்"
கருத்துரையிடுக