கன மழை நாளையும் பொழியும் ஃபென்சல் புயல் நாளை கரையை கடக்கும்_பிரதீப் ஜான்..

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் நிலவி வரும் ஃபென்சல் புயல் நாளை கரையை கடக்கும் என தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் நிலவி வரும் ஃபென்சல் புயல் நாளை கரையை கடக்கும் என தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபென்சல் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. காலை முதல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

article_image2

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை ஓய்ந்துள்ள நிலையில், இன்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபென்சல் புயல் கரையை கடக்கும் வரை சென்னையில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபென்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த புயல் நாளை தான் கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதுவரை மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், மேலும் மேகங்கள் உருவாகி வருவதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புயல் கடலில் இருக்கும் போது திடீரென மேகங்கள் உருவாகி நிலத்தை நோக்கி தள்ளும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

article_image3

மேலும் இந்த புயல் இன்று கரையை கடக்காது நாளை தான் கரையை கடக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாளை வரை மழை நீடிக்கும் எனத் தெரிகிறது. மேலும், சென்னையின் மத்திய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்றும், புயல் கடலில் இருக்கும் வரை புதிய மேகங்கள் உருவாகி நகருக்குள் நகரும் என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக மத்திய சென்னையில் தொடர் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும், ஏரிகளின் சேமிப்பை மேம்படுத்தும் வகையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

0 Response to "கன மழை நாளையும் பொழியும் ஃபென்சல் புயல் நாளை கரையை கடக்கும்_பிரதீப் ஜான்.."

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel