சென்னை: சென்னை அமைந்தகரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது நவாஸ் (35) என்பவர் குளியலறையில் 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முகமது நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆரம்பத்தில், சிறுமி வேலை முடிந்து கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நாஜியா இருவரும் ஓடி வந்து கதவை தட்டி கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி தரையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக நவாஸ் கூறினார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிறுமியின் உடலில் பல்வேறு காயங்களும், சிகரெட் தீக்காயங்களும் இருந்தன. மேலும் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையும் படியுங்கள் : சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி கொலை… விசாரணையில் அதிர்ச்சி
இதன்படி, சென்னை, நடக்கரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நவாஸ், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி நசியா மற்றும் 6 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.
மனைவிக்கு பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை (அவள் வேலைக்குச் சேர்ந்தபோது வயது 14) வீட்டு வேலைக்கு அமர்த்தினார். இவரது வீட்டில் சிறுமி தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த பெண் முகமது நவாஸின் சகோதரி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை இறந்ததால், சிறுமி தனது தாயின் அரவணைப்பில் இருந்தாள். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக தாயை பிரிந்து முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தினர்.
இதையும் படியுங்கள் : தளபதியின் ‘Goat’ வசூல் சாதனையை இரண்டே நாட்களில் முறியடித்த அமரன்!
அதுமட்டுமின்றி முகமது நவாஸின் நண்பர் லோகேஷ் என்பவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் தீபாவளி தினத்தன்று தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என எதிர்பார்க்காத சிறுமி, காலையில் எழுந்து வழக்கம் போல் வீட்டு வேலைகளை தொடங்கினார்.
ஆனால், முகமது நவாஸ், அவரது மனைவி நாஜியா மற்றும் அவர்களது நண்பர் லோகேஷ் ஆகியோர் சிறுமியை அன்றைய தினம் கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலால் சிறுமி மயக்கமடைந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் சேர்ந்து சிறுமியை இழுத்து குளியலறைக்குள் கொண்டு சென்றனர். சில மணி நேரம் கழித்து, குளியலறைக்குள் சென்று பார்த்தபோது, சிறுமி உயிரிழந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படியுங்கள் : நாய் வாலில் பட்டாசு வாலிபர் கொடூரச்செயல் மக்கள் கடும் கோபம்..
இதனால் பயந்துபோன கணவன்-மனைவி இருவரும் சிறுமியை குளியலறையில் போட்டுவிட்டு உடலை அங்கேயே வைத்துவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தலைமறைவாகியுள்ளனர். விசாரணையில் லோகேஷ் மூலம் வக்கீலை ஏற்பாடு செய்து நேற்று (நவம்பர் 1) மாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முகமது நவாஸின் நண்பர் லோகேஷ் (25), அவரது மனைவி ஜெய்சக்தி (24) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
லோகேஷ் மீது கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சிறுமிக்கு வேலை கொடுத்த நவாஸின் சகோதரி சீமா (39), அதே வீட்டில் பணிபுரிந்த மற்றொரு பணிப்பெண் மகேஸ்வரி (40) என மொத்தம் 6 பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளியலறையில் சிறுமி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துரையிடுக
0கருத்துகள்