கள்ளக்குறிச்சி : அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு 107 ஆவது பிறந்தநாள் நிறைவு விழா..

Theechudar - தீச்சுடர்
By -
0

கள்ளக்குறிச்சி

ந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு 107 ஆவது பிறந்தநாள் நிறைவு விழா முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட பகண்டை கூட்ரோடு ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை, கள்ளக்குறிச்சி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசேலத்தார் PS. ஜெய்கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி. ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரிஷிவந்தியம் வாணாபுரம் பகண்டை கூட் ரோட்டில் 19/11/2024 செவ்வாய்க்கிழமை அன்று.

இதையும் படியுங்கள் : TNPSC Group 4: இன்னும் 2 நாள்தான் குரூப் 4 தேர் வாளர்களுக்கு tnpsc புதிய அறிவிப்பு …

இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமராகவும் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தி அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழாவை அன்னை இந்திரா காந்தி அவர்களின் உருவ புகைப்படம் வைத்து மரியாதை நிமித்தமாக மாலை அணிவித்து மலர் தூவி வட்டாரத் தலைவர் எஸ் கிருபானந்தம் அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது. மேலும் ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வடக்கு வட்டாரத் தலைவர் அப்பாரசு , மாவட்ட பொதுச் செயலாளர் ஐயா சாமி , ரிஷிவந்தியம் நகரத் தலைவர் இராதாகிருஷ்ணன் , வட்டார அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் S.சிவலிங்கம் , வட்டார செயலாளர் அபிலாஷ் , ஆகியோர்களின் முன்னிலையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : மாமியாரை எரித்த மருமகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொலை

இந்நிகழ்ச்சியில் வட்டாரத் துணைத் தலைவர் செல்வம் , வட்டார பொதுச் செயலாளர் ஆர்க்க வாடி சக்கரவர்த்தி , கடம்பூர் எல்ஐசி ஆறுமுகம் , சித்தாள் அச்சுதன் , மாவட்ட பொதுச் செயலாளர் அவுரியூர் சுப்பிரமணி , கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் . மரூர் புதூர் காசி , கரையாம் பாளையம் குப்புசாமி , ஓடியந்தல் கக்கன் , பெரிய கொள்ளியூர் தனபால் , பழைய சிறுவங்கூர் ஆறுமுகம் , கடம்பூர் சுப்பராயன் , கோவிந்தன் , கீழத்தேனூர் கண்ணன் , மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும். அன்னை இந்திரா காந்தி அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.

                                                                                                   
தீச்சுடர் செய்தியாளர்
எஸ்.சிவலிங்கம்

 ரிஷிவந்தியம்
 89 25 45 86 93

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)