சுகாதார ஊக்குனர்களுக்கு ஊதியம் வழங்கிட மாவட்ட ஆட்சியாரிடம் மனு.
கள்ளக்குறிச்சி
ஒட்சா அமைப்பின் ஊராட்சி பணியாளர்கள் மாநில சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 412கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குனர்களுக்கு சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அவர்களின் கடிதம் ந க. என் 42416/2023.து ப இ. (ஊ )2. நாள் 4./1/2024.
ஊதிய தொகையினை வழங்ககோரி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் 2000.ரூபாய் ஊதியம் வழங்க ஆணை வரப்பட்டுள்ளது. இவை அணைத்து மாவட்டங்களிலும்ஆணை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 9மாதங்களாக ஊரக வளர்ச்சி இயக்குனர் அவர்களின் செயல் முறையில் குறிப்பிட்ட படி தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுகாதார ஊக்குனர்களுக்கு ஊதியங்களை உரிய உத்தரவினை பிறப்பித்தும் செயல்படுத்தாமல் இருப்பதால் ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை ஊதிய தொகையினை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தனர். இதில் தலைமை மாவட்ட நிர்வாகிகள்.
ஒட்சா கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ஜி கிரிஷா. சென்னம்மாள் மாநிலத் தலைவர் மாநில ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரி சேலம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி ஆகியோர்களின் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார ஊக்குனர்கள்1.ரிஷிவந்தியம்.2.உளுந்தூர்பேட்டை3.தியாகதுருகம்.4.கள்ளக்குறிச்சி.5.சங்கராபுரம்.6. சின்ன சேலம்.7.திருநாவலூர். ஆகிய ஒன்றிய ஊராட்சி சுகாதார ஊக்குனர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்…
ஒரே மாதிரியான ஊதியம்
மேலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 1825 தூய்மை காவலர்களுக்கு பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் ஊதியம் மற்றும் சீருடை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க ஆவண செய்யுமாறு ஒட்சா ஊராட்சி பணியாளர்கள் மாநில சங்கத்தின் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
செய்தியாளர் .எஸ் சிவலிங்கம். 89 25 45 86 93 ரிஷிவந்தியம்.
0 Response to "சுகாதார ஊக்குனர்களுக்கு ஊதியம் வழங்கிட மாவட்ட ஆட்சியாரிடம் மனு."
கருத்துரையிடுக