கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி இளையனார் குப்பம் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சரியான சாலை வசதி இல்லை பல ஆண்டு காலமாக ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும், வட்டார வளர்ச்சி அலுவலகமும், வட்டாட்சியர் அலுவலகமும், சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பலமுறை பல ஆண்டு காலமாக மனு கொடுத்தும், நேரில் சந்தித்தும் முறையிட்டுள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த அரசியல்வாதியும், எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எங்கள் ஓட்டு அரசியல்வாதிக்கு மட்டும் வேண்டும்,ஆனால் எங்கள் மக்கள் பிரச்சினையை தீர்க்க மாட்டார்கள் சில அதிகாரிகளும் இங்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் , எங்கள் ரேஷன் கார்டும் ,வோட் ஐடியும் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்றும், எங்களுக்கு எந்த ஒரு வசதியும் தேவையில்லை, எந்த ஒரு சலுகையும் தேவையில்லை என்று அக்கிராம மக்கள் சாலையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்