ரூ 6,000 கோடி மதிப்பிலான பட்டாசு விற்பனை ; வியாபாரிகள் மகிழ்ச்சி
சென்னை: நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. பொதுமக்களும் ராக்கெட், வெடிகுண்டு என பல்வேறு பட்டாசுகளை வாங்கி வெடித்துச் செல்கின்றனர்.
தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பு கூறியதாவது:கடந்த ஆண்டு மழை மற்றும் இதர காரணங்களால் பட்டாசுகள் தேக்கம் அடைந்து, இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதம் விற்றுத் தீர்ந்து விட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் மூலம் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
மழையின் காரணமாக கடந்த ஆண்டை விட 75 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது. நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Chennai: Firecrackers worth Rs.6,000 crore have been sold across the country, according to the Tamil Nadu Firecracker Traders Federation.
Diwali, the main festival of Hindus, is being celebrated with great fervor across the country today. Due to this, the sale of firecrackers has been heating up for the last one week. The public is also buying different types of firecrackers like rockets and grenades and bursting them.
Tamil Nadu Firecracker Traders Federation has said that last year firecrackers were stagnant due to rains and other reasons, 90 percent of the firecrackers produced this year have been sold out.
In this regard, they have said: In Sivakasi, crackers were manufactured by 4 lakh workers in 1,150 firecracker factories. Manufactured crackers were sold to other states including Tamil Nadu.
Due to rains, only 75 percent of crackers were produced than last year. It has been said that crackers worth Rs.6 thousand crore have been sold across the country.
0 Response to "ரூ 6,000 கோடி மதிப்பிலான பட்டாசு விற்பனை ; வியாபாரிகள் மகிழ்ச்சி"
إرسال تعليق