உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து அப்போது எச்சரித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் தெரிவித்தார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது, அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்க, பசுவின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது என தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்தைப் பொறுத்த வரையில், லட்டு தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களும் “AP eProcurement” “eGP Portel” (E Action) என்ற ஆன்லைன் ஏல முறை மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைந்த பிறகு, திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தேவஸ்தான அதிகாரியாக சியாமளா நியமிக்கப்பட்டு, அவரிடம் நடத்திய விசாரணையில்தான் ஆணி கலப்படம் இருப்பது தெரியவந்தது. சுமார் 5 நிறுவனங்களுக்கு நெய் வழங்க டெண்டர் அனுப்பப்பட்ட நிலையில், 68,000 கிலோ நெய்யில் 20,000 கிலோ நெய் கலப்பட நெய் என கண்டறியப்பட்டது. இதுபற்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ”ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்திற்காக தயாரிக்கப்பட்ட நெய்யில், நெய் கலந்த விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தினர்.”இது பெரிய குற்றம். சுவாமியின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். சுவாமி பிரசாதம் மட்டுமின்றி அனைத்து பிரசாதங்களிலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
அவரது குற்றச்சாட்டை அடுத்து பல இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தேவஸ்தான நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றன. இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் பன்றி இறைச்சிக் கொழுப்பு, எருமைக் கொழுப்பு, மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதுலு கூறுகையில், “லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பசு நெய்யில் அதிக கலப்படம் மற்றும் தரம் குறைந்ததாக இருந்தது. இதை பல ஆண்டுகளுக்கு முன்பே கவனித்தேன்.
- அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் முன் வைத்தேன். ஆனால் அவர்கள் அதைப் பார்க்கவில்லை. கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையும், பக்தியும் கொண்ட புனித கோவிலில், தற்போது அரசு பால் பண்ணைகளில் இருந்து பசு நெய்யை பயன்படுத்தி, சுத்தமான நெய்யில் உணவு வகைகளை தயாரித்து, பெரும் பாவம் என்றார்.
கருத்துரையிடுக
0கருத்துகள்