Vijay Kadam Death : விஜய் கதம் காலமானார்: திரைப்படம் மற்றும் சீரியல்கள் என பல்வேறு ஊடகங்களில் பிரபலமடைந்த பிரபல நடிகர் விஜய் கதம் சனிக்கிழமை காலை அந்தேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய பாதிக்க பட்டிருந்தார் .
எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளில் விஜய் கடம் மேடையில் செய்த வேலை அவருக்கு உண்மையான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ‘டூர்டூர்’, ‘விச்சா மாஜி பூரி காரா’, ‘பாப்பா சங்க குணச்சே’ போன்ற பல பிரபலமான நாடகங்களில் நடித்தார். அவர் கடைசியாக ‘தி பிராட் ஆலியே’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
இதையும் படியுங்கள் >> Anna University :அண்ணா பல்கலை கழகத்தில்25000 ரூ சம்பளம் வேலை வாய்ப்பு !!
‘தேரே மேரே சப்னே’, ‘இர்சல் கார்த்தி’, ‘தே தனாடன்’, ‘தே தடக் பெத்தடக்’, ‘ஹால்ட் ருஸ்லி குங்கு ஹசலம்’ போன்ற பல மராத்தி படங்களில் நடித்தார். பலவிதமான வேடங்களில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே அவர் பிரபலமானார். அவருக்கு வயது 67. அவர் மனைவி மற்றும் மகன் உள்ளனர். அவரது உடல் இன்று பிற்பகல் அந்தேரி ஓஷிவாரா மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
கருத்துரையிடுக
0கருத்துகள்