Indian Railway job :இந்திய ரயில்வே வேலைகள்; 7951 பதவிகள்: டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வே வேலைகள்; 7951 பதவிகள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில், நாடு முழுவதும் மொத்தம் 7951 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னையைச் சேர்ந்த தெற்கு ரயில்வேயில் 652 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2024க்குள் விண்ணப்பிக்கவும்.

இளைய பொறியாளர்

காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை : 7951

நிரப்பப்பட உள்ள பதவிகள்:

இளைய பொறியாளர் Junior Engineer

இரசாயன மற்றும் உலோகவியல் உதவியாளர் (Chemical and Metallurgical Assistant )

டிப்போ பொருள் கண்காணிப்பாளர் (Depot Material Superintendent )

இரசாயன மேற்பார்வையாளர் / ஆராய்ச்சி
(Chemical Supervisor / Research)

உலோகவியல் மேற்பார்வையாளர் / ஆராய்ச்சி
( Metallurgical Supervisor / Research)

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது பட்டம். பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி: 01.01.2025 தேதியின்படி 18 வயது முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 35,400 – 44,900

தேர்வு செய்யும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலை தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எனினும் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

0 Response to "Indian Railway job :இந்திய ரயில்வே வேலைகள்; 7951 பதவிகள்: டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!"

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel