ஆபத்தான நிலையில் உடைந்து சரியும் பாறை ....

Theechudar - தீச்சுடர்
By -
0

கள்ளக்குறிச்சியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கல்வராயன் மலை இந்த கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சுற்றுலாத்தளத்தில் இதுவும் ஒன்று இந்த கல்வராயன் மலை என்னும் வெள்ளி மலையில் ,பெரியார் நீர்வீழ்ச்சி,மேகம் நீர்வீழ்சி, படகுதுறை, அமைந்துள்ளது அது மட்டுமின்றி கல்வராயன் மலையில் நிறைய கிராமங்கள் அமைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் போன்ற வாகன போக்குவரத்து
அதிகமாகவே உள்ள பகுதி இது.

எழில் கொஞ்சும் இந்த சுற்றுலாத்தலம்.

கள்ளக்குறிச்சியில் பெயர் போனது இந்த வெள்ளி மலைக்கு மக்கள் அதிகமாகவே செல்வது வழக்கம் அதேபோல் சுற்றுலா பயணி ஒருவர் வெள்ளி மலை பெரியார் நீர்வீழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த பாறை ஒன்று ஆபத்தான நிலையில் உடைந்து சரியும் வாய்ப்புள்ளது அறிந்து அதனை புகைப்படம் எடுத்துள்ளார் அது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

அந்தப் பாறையின் ஆபத்தை கருத்தில் கொண்டு சரி செய்யப்படுமா என்ன சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் .

செய்திகளுக்காக
ஜெ . ஜெயமூர்த்தி

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)