ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ! வெளியான பகீர் தகவல்.. காங்கிரஸ் நிர்வாகி கைது!

Theechudar - தீச்சுடர்
By -
0

ஆம்ஸ்ட்ராங் தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தார்.  இவர் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, திருவேங்கடம், ராமு, ஹரிஹரன், ஹரிதரன், மலர்க்கொடி, அஞ்சலை உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்க்ராப் தொழிலில் ஏற்பட்ட போட்டியால் அவர் கொல்லப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Climbing Event’ Google Doodle Showcases Olympics 2024 கூகுள் டூடுல் பாரிஸ் ஒலிம்பிக் 2024 ‘ஏறும் நிகழ்வு’ காட்சிப்படுத்துகிறது

பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரன் தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதான வழக்கறிஞர் அருளுடன் அஸ்வத்தாமனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரன் தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதான வழக்கறிஞர் அருளுடன் அஸ்வத்தாமனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

வங்கதேசத்தில் 24 பேர் உயிருடன் எரிப்பு l பற்றி எரியும் வன்முறை !! 100க்கும் மேற்பட்டோர் பலி!

இதையடுத்து அஸ்வத்தாமனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சோழவரம் அருகே மோரை பகுதியில் நிலத்தகராறு தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமாவுக்கு முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரன் என்ற ஆயுள் கைதிக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே பரோலில் வந்த நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங்கை அழைத்து அஸ்வதாமனுடனான பிரச்சனை குறித்து பேசியதாகவும், ஆம்ஸ்ட்ராங் அதற்கு பதில் அளிக்கவில்லை என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சிறையில் சதி நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வதாமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அஸ்வத்மாமன் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)