முதல் பெண் வழக்கறிஞருக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கார் குழலி கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவன தலைவர் இராசு.தாமோதரன் தலைமையில் தேவபாண்டலத்தின் முதல் பெண் வழக்கறிஞரான நதியா மகேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மகுடம் அணிவித்து சிறப்பிக்க பட்டது. இதில் கார்குழலி கல்வி அறக்கட்டளை செயலாளர் கோ.வசந்தா தாமோதரன் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கற்க கசடற கல்வி தளத்தின் நிறுவனர் தேவ.திருவருள் , சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க துணைச் செயலாளர் கோ.சக்திவேல், பசுமை இயக்க நிறுவனரும், சமூக சேவகருமான சுப்பு.சுதாகர் உட்பட கலந்து கொண்டனர்.