ஜபல்பூரில் கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது தாக்குதல்


ஜபல்பூரில் கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது தாக்குதல் SDPI கடும் கண்டனம் தெரிவிக்கிறது

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், கடந்த மார்ச் 31 அன்று, பஜ்ரங்தள் பயங்கரவாதிகள்,  கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதலை எஸ்டிபிஐ  கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. 

 இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்;  ஜூபிலி 2025 யாத்திரையில் பங்கேற்ற பாதிரியார்கள், பழங்குடியினர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அமைதியான குழுவை சங்பரிவார  தீவிரவாதிகள் தாக்கிய இச்சம்பவம், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஃபாதர் டேவிஸ் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவு தெரிவித்துள்ள எஸ்டிபிஐ கட்சி, கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டுகளை வன்முறைக்கான சாக்குப்போக்கு என விமர்சித்து, நீதி கோரியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களை கோரபஜார் காவல் நிலையத்தில் தடுத்து வைத்ததுடன், கைது செய்யப்பட்ட 6 தாக்குதல்காரர்களுக்கு ஒரு மணி நேரத்தில் ஜாமீன் வழங்கிய அதிகாரிகளின் நடவடிக்கை, சட்டத்தின் நடுநிலைமை குறித்த கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மதச் சகிப்பின்மையை எதிர்க்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இது தனி சம்பவமல்ல, சிறுபான்மையினருக்கு எதிரான பரவலான தாக்குதலின் பகுதி எனவும், இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான சவால் எனவும், மத சுதந்திரத்தை பாதுகாக்க நீதித்துறை மற்றும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் தோழன் 

JR டேவிட்

மாநில செயற்குழு உறுப்பினர் 

#SDPI
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url