அஷ்ட சூரணம்
அஷ்ட சூரணம் எனப்படும் அஷ்ட வர்க்க உணவுப்பொடி...
சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் புளித்த ஏப்பம் வரும். வயிறு உப்பிப் போகும். லேசான அமிலத்துடன் சாப்பிட்ட உணவின் வாசம் தொண்டை வரை எட்டிப்பார்க்கும்.
இவர்களுக்குத் தேவை இந்த அஷ்ட சூரணம்.
குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.
தேவையானவை
********************
சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம்.
செய்முறை
**************
இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும்.
இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அதுவே அஷ்ட வர்க்க உணவுப் பொடி.
பயன்படுத்தும் முறை
*************************
இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும்.
இது ‘அஷ்ட சூரணம்’ என்ற பெயரில் அனைத்து நாட்டு மருத்துக் கடைகளிலும் கிடைக்கிறது.