அசாம் மாநிலத்தில் குவாஹாட்டியில் ராகுல் காந்தி மீதான வழக்கினை எதிர்த்து வானாபுரம் பகண்டை கூட் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகண்டை கூட் ரோட்டில் பாரதிய ஜனதா ( பிஜேபி ) அரசை கண்டித்து. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை MLA, வின்
அறிவிப்பின்படி, அசாம் மாநிலம் குவஹாட்டியில் பான்பஜார் காவல் நிலையத்தில் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற வகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கின்ற பாஜக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் நடைபெற்ற மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம்
22/01/2025 புதன் அன்று பகண்டை கூட் ரோட்டில் சுமார் 12 : மணியளவில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் பி.எஸ்.ஜெய்கணேஷ், தலைமை வகித்தார். ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.கிருபானந்தம் வரவேற்புரையாற்றினார்,
ரிஷிவந்தியம் வடக்கு வட்டார தலைவர் அப்பாராசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரமுத்து, மணலூர்ப்பேட்டை நகர தலைவர் கமரூதின், மாவட்ட பொதுச் செயலாளர்கள் அய்யாசாமி, பன்னீர்செல்வம், வெங்கடேசன், ரகுபதி, ரிஷிவந்தியம் நகர தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நகர தலைவர் குமார், கள்ளக்குறிச்சி நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், மருத்துவ அணி சுகுமார், வட்டார அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் சிவலிங்கம், வட்டார செயலாளர் அபிலாஷ், வட்டார துணை தலைவர்கள் கோவிந்தன், செல்வம், வட்டார பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, அரிகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள்அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தீச்சுடர் செய்தியாளர்
S. சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
8925458693.